ரஜினி பயணித்த விமானம் – இயந்திர கோளாறால் தரையிறக்கம்

224

மிடுக்கான நடை, பரட்டை தலை, கருத்த உடல் இது தான் ரஜினி என்ற அந்த தனி மனிதனின் அடையாளம் என்பார்கள் அவரின் ரசிகர்கள். சுமார் 45 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முடிசூடிய மன்னனாக அவர் வலம்வருகிறார், பல வருடங்களாக அரசியல் பிரவேசம் செய்வார் என்று எதிர்பார்த்து, இப்பொது தனது 70 வயதில் அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தந்தை பெரியார் குறித்து பேசி கருத்து சர்ச்சையாகவே.. “நான் பேசியதில் எந்த தவறான கருத்தும் இல்லை, ஆகையால் நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்” என்று தைரியமாக சொன்னார்.

இந்நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து மைசூருக்கு புறப்பட்ட ஒரு சிறிய விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் 48 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் சென்னை விமான நிலையத்திற்கே திரும்பி வந்தது.

அந்த சிறிய ரக விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால், விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார் பைலட். அனுமதி கிடைத்ததும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர்.