வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும்

613

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் அமரிந்தர் சிங் நேரில் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வெள்ள பாதிப்புகளை கணக்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.
பஞ்சாப்பில் ராணுவம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement