வாஷிங்டன் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம்

284

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் நகரின் சில பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டது. கனமழை காரணமாக நகரின் முக்கிய சாலைகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. மேலும் மழை வெள்ளத்தில் சிக்கி பலர் மீட்பு குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கனமழை வெள்ளத்தின் காரணமாக வீடுகள்  வணிக வளாகங்களில் மழை நீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of