ஈரான் நாட்டில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல்

334
iran

ஈரான் நாட்டில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் நாட்டில் கடந்த 5-ம் தேதியில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. மஜந்தரன், கிலான், கோலஸ்டான் மாகாணங்களில் இந்த மழை, வெள்ளத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள், வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.

வெள்ளத்தில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. அங்காங்கே மரங்களில் முறிந்து விழுந்ததில் மின்வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளது. இந்த மழை, வெள்ளம் தொடர்பாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுவதற்கு குழுக்களை ஈரான் மீட்பு மற்றும் நிவாரண அமைப்பு அனுப்பி வைத்துள்ளது.