நாங்க Duty-ல strict! ஏ.டி.எம். பணத்தையும் விட்டு வைக்காத தேர்தல் பறக்கும் படை!

360

தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, சூலூர் அருகே உள்ள சோளக்காட்டு பாளையத்தில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில், கட்டு கட்டாக ஒரு கோடியே 98லட்சத்து 6ஆயிரத்து 400 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, வேனில் வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், இந்த பணம் கோவை புலியகுளத்தில் இருந்து வாகராயம்பாளையம் ஏடிஎம் மையத்திற்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சூலூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of