பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் அருண் ஜெட்லி ஆலோசனை

421

பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆலோசனை நடத்த உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பொதுத் துறை வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து பொது வங்கிகளை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த ஆலோசனை வழக்கமாக நடைபெறும் ஆண்டு நிதிச் செயல்பாடுகள் குறித்த கூட்டம்தான் என்றாலும், பொதுத் துறை வங்கிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாராக் கடன் சுமையை எதிர்கொண்டுள்ளது.

இதனையடுத்து பாங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வங்கிகளை வாராக்கடன் சுமையில் இருந்து மீட்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of