அதிமுக – பாஜக கூட்டணி பெரும் தோல்வி அடையும் – வைகோ

499

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கஜா புயலால் பாதித்த மக்களையும், டெல்டா பகுதிகளையும் சந்திக்க நேரமில்லாத பிரதமர், பிரச்சாரத்திற்கு மட்டும் வருவது ஏன் என கேள்வி எழுப்பினார்.தமிழகத்தில் நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை எல்லாம் கொண்டு வந்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றார்.

அதிமுக – பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் பெரும் தோல்வி அடையும் என்ற அவர், 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of