கஜா புயலைத் தொடர்ந்து, வங்கக்கடலில் மேலும் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு

1174

கஜா புயலைத் தொடர்ந்து, வங்கக்கடலில் மேலும் 2 புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கஜா புயல் பாம்பன் – நாகை இடையே கரையை கடந்தது. கஜா புயலால், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில்  12 ஆயிரம் மின்கம்பங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

மின் விநியோகம் சீரடைய  2 நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான  மரங்கள் வேறோடு சாய்ந்து விழுந்துள்ளன. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில்  இயல்புநிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் திருச்சியில் விமான சேவை முடங்கியுள்ளது, உள்மாவட்டங்களான திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை  பெய்து வருகிறது.

இந்நிலையில், வங்கக்கடலில் அடுத்த 2 வாரங்களில் மேலும் 2 புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலில் குறைந்த காற்றழுத்தமாக உருவாகி பின்னர் வலுப்பெற்று புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

முதல் புயலுக்கு பெதாய் , என்றும் அடுத்த புயலுக்கு ஃபெனி  (FANI)  என பெயர் சூட்டப்படும் எனத் தெரிகிறது.

 

Advertisement