ஜார்கண்டில் உணவில் விஷம் : 40 பேர் பாதிப்பு

114

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரியாக் அருகே பட்மா ராணுவ பயிற்சி மையம் அமைந்துள்ளது.

இதில் ராணுவ ஜவான்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் விஷம் உருவானதாக கூறப்படுகிறது.

இதனை சாப்பிட்டு 40 க்கும் மேற்பட்ட ஜவான்களுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஹசரியாக் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் உணவில் பல்லி இறந்து இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் பயிற்சி மையத்தில் ஜவான்களுக்கு தரக்குறைவான உணவு வழங்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of