கோமாரி நோயால் செத்து மடியும் மாடுகள்

  237
  Komari-disease

  கன்னியாகுமரி மாவட்டத்திலும் கோமாரி நோயால் 50க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாக கால்நடை விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

  கன்னியாகுமரி மாவட்டம் தாழாக்குடி, வெள்ளமடம், செண்பகராமன்புதூர், பூதப்பாண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோமாரி நோய் வேகமாக பரவி வருகிறது.

  கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோமாரி நோய்க்கு 50க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.

  100க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு நோய் தாக்குதல் உள்ளதால், பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

  கோமாரி நோயை கட்டுப்படுத்த அரசும், கால்நடைத் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

  அரசு கால்நடை மருத்துவமனைகளில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாகவும், இருப்பு உள்ள தடுப்பூசி மருந்துகளையும், தனியார் மாட்டு பண்ணைகளுக்கு கால்நடை துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக விற்பதாக புகார் தெரிவித்தனர்.