கோமாரி நோய் தாக்குதல் அதிகம் – பசு மற்றும் எருமை சந்தைகள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை

259
Komari

திருப்பூர் மாவட்டம் காங்கயம், நத்தக்காடையூர், குட்டப்பாளையம், சாவடிப்பாளையம், பரஞ்சேர்வழி ஆகிய பகுதிகளில் கோமாரி நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது.
கோமாரி நோய்க்கு இதுவரை 40 மாடுகள் இறந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மாடுகளுக்கு கால்நடைத்துறை மூலம் தடுப்பூசிகள் போடப்பபட்டும் நோய் தாக்குதல் குறையவில்லை என்று கூறினர்.

இறந்த மாடுகளுக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே கோமாரி நோய் பரவுவதை தடுக்க திருப்பூர் மாவட்டத்தில் 23-ம் தேதி வரை பசு மற்றும் எருமை சந்தைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.