காயங்களுடன் தப்பிய விலங்குகளுக்கு, வன உயிர் ஆர்வலர்கள் சிகிச்சை

371

அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீயில் இருந்து காயங்களுடன் தப்பிய விலங்குகளுக்கு, வன உயிர் ஆர்வலர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீ விபத்தால், அங்குள்ள விலங்குகள் பேரழிவைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், அங்கிருந்து தப்பி வந்த விலங்குகளை மீட்டு, வனவிலங்கு ஆர்வலர்கள் சிலர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், உடல் பாகங்கள் கருகியும், கண்களை இழந்த நிலையிலும் உள்ள விலங்குகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், காடுகள் சீரானவுடன் வனப்பகுதிக்குள் விடப்படும் எனவும் வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.