ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாகிவிடும் – நீதிபதிகள்

317

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுமீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, பொருளாதாரக்குற்ற வழக்குகளை தீவிரமான குற்றமாக கருதவேண்டியுள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

எனவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்குவது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர். இதனால், அமலாக்கத்துறை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ப.சிதம்பரம் திகார்சிறையில் இருந்து விடுதலையாவதில் சிக்கல் நீடிக்கிறது. சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்ற நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால், ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் சிதம்பரம் விடுதலையாவதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம்தேதி சிபிஐ – ஆல் கைது செய்யப்பட்ட சிதம்பரத்தின் சிறைவாசம் 80 நாட்களுக்கும் அதிகமாக நீடிக்கிறது

Advertisement