அதிமுக LED விளக்கு போல் பிரகாசமாக எரியும்: ஸ்டாலினுக்கு, தம்பிதுரை பதிலடி

863

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கரூர் வந்த தம்பிதுரை, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக அணையும் விளக்கல்ல என்றும், 5 வருடம் கேரண்டியுடன் எரியும் LED விளக்கு எனவும் கூறினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறியது போல் 100 ஆண்டுகளுக்கு மேலும் ஆட்சி தொடரும் என்று குறிப்பிட்ட அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் கவலையில்லை என தெரிவித்தார். மேலும், அதிமுக-வை யாரும் அழித்துவிட முடியாது என்றும், 40 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும் எனவும் கூறினார்.

Advertisement