6 இடங்கள் முன்னேறிய முகேஷ் அம்பானி

235

ஆண்டு தோறும்  போர்ப்ஸ் இதழ் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 19-வது இடத்தில் இருந்து 13-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இ-காமர்ஸ் துறையின் ஜாம்பவான் அமேசானின் நிறுவனர் பெசோஸ், பில்கேட்ஸ் மற்றும் வாரன் பபேட்டை பின்னுக்குத்தள்ளி  முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.9.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

2018-ம் ஆண்டு சுமார் ரூ.2.83 லட்சம் கோடியாக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது சுமார் ரூ.3.53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 6 இடங்கள் முன்னேறி உள்ளார் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானி 106 இந்திய பணக்காரர்களில் முதலிடம் பிடித்துள்ளார் . விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி 36-வது இடத்தில் உள்ளார். எச்.சி.எல். இணை நிறுவனர் சிவ் நாடார் 82-வது இடத்திலும், லக்‌ஷ்மி மிட்டல் 91-வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் முகேஷ் அம்பானியின் சகோதரரும் ஆர்.காம் நிறுவனத்தின் தலைவருமான அனில் அம்பானி 1349-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of