வெளி நாட்டை சேர்ந்தவர்கள் கைது – போதைப் பொருள் பறிமுதல்

643

மும்பை அந்தேரி பகுதியில் வெளிநாட்டிற்கு கூரியர் நிறுவனத்தின் மூலம் போதைப்பொருள் கடத்த உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில்  சாலையில் நடந்து சென்ற வெளிநாட்டை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்கள் வைத்திருந்த பார்சலை பிரித்து  சோதனையிட்டபோது,  ஜன்னலுக்கு பயன்படுத்தும் திரைச்சீலைகள் பெரிய வளையங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

அந்த வளையங்களை உடைத்து பார்த்தபோது அதில் 6 கிலோ 492 கிராம் எடையுள்ள ‘கோகைன் போதைப்பொருள் மறைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கூரியர் மூலம் வெளிநாட்டுக்கு கடத்த இருந்ததும்  தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இதில் தொடர்புடைய பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரையும், நைஜீரியாவை சேர்ந்த 3 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 38 கோடியே 95 லட்சம் என  மதிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of