பெண் அதிகாரி மீது தாக்குதல் : MLA சகோதரர் உட்பட 15 பேர் கைது..!

767

தெலுங்கானாவில் பெண் வனத்துறை அதிகாரியை தாக்கியதாக தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி எம்.எல்.ஏ.வின் சகோதரர் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மலைக்கிராமம் ஒன்றில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் மரக்கன்றுகள் நட முயற்சித்த அனிதா என்ற வனத்துறை அதிகாரியையும், காவல்துறையையும் அரசியல் கட்சி பிரமுகரின் ஆட்கள் கம்புகளால் தாக்கினர். அவர்களைத் தாக்க வேண்டாம் என்று டிராக்டர் மீது ஏறி நின்று மன்றாடிய பெண் அதிகாரியும் பலமாக தாக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அனிதா தன்னை தாக்கியது கோனேரி கிருஷ்ணாவும் அவர் ஆட்களும்தான் என்று வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து கோனேரி கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement