கலீம் உதவியுடன் சின்னத்தம்பியை பிடிக்க முயற்சி!! திருப்பூரில் பரபரப்பு!!

749

கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்களில், சின்னத்தம்பி என்ற காட்டு யானையும் ஒன்று. இந்த யானை காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி, விவசாயிகளின் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தது.

இதனால் அந்த யானை பிடிக்கப்பட்டு, வனப்பகுதிக்கு விடப்பட்டது. மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த யானை, தொடர்ந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தது.

இந்த யானையை பிடிக்க அப்பகுதி விவசாயிகள், கோரிக்கை வைத்த நிலையில், வனத்துறையினர் அந்த முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் கண்டிபுத்தூர் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானையை, கும்கி யானை கலீம் உதவியுடன் பிடிக்க வனத்துறையினர் முயற்சி செய்து வந்தனர்.

மயக்க மருந்து தடவிய ஊசியை வைத்து யானையை முயற்சி செய்த அவர்கள், முதல் குறி தவறிய நிலையில், ஊசியை செலுத்தினர்.

Advertisement