அச்சுறுத்தி வரும் காட்டுயானைகள் – கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர்

272

அச்சுறுத்தி வரும் காட்டுயானைகள்கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த 2 காட்டுயானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை பகுதிகளில் புகுந்த 2 காட்டு யானைகள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அட்டகாசம் செய்து வந்தது. அங்கிருந்த காட்டுயானைகளை பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டி அடித்தனர்.

ஆனால் காட்டுயானைகள் வனப்பகுதிக்கு செல்லாமல் அங்குள்ள விளைநிலங்களில் உள்ள பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் பாதிப்படைந்துள்ள அப்பகுதி மக்கள் காட்டுயானைகளை வனத்துறையினர் விரட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதன் அடிப்படையில் தற்போது இந்த 2 காட்டு யானைகளையும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் யானைகளை பிடிக்க கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of