அர்ஜென்டினா முன்னாள் அதிபர் காலமானார்!

221

அர்ஜென்டினா நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பெர்னான்டோ டே லா ருவா சட்டப்படிப்பை முடித்துவிட்டு அந்நாட்டில் 18-ம் நூற்றாண்டு காலத்தில் தொடங்கப்பட்ட நடுநிலை சமூக-விடுதலை இயக்கத்தின் மூலம் அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தார்.1973-ம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராகி படிப்படியாக முன்னேறிய பெர்னான்டோ டே லா ருவா புதிய சட்டத்திருத்தன் மூலம் உருவாக்கப்பட்ட புய்னோஸ் எய்ரேஸ் அரசுக்கு மேயராக தலைமை தாங்கினார்.

பின்னர் 10-12-1999 முதல் 21-12-2001 வரை அர்ஜென்டினா நாட்டின் அதிபராக பெர்னான்டோ டே லா ருவா பதவி வகித்தபோது கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு அந்நாடு உள்ளானது.

அப்போது அவசரநிலை சட்டத்தை பிரகணப்படுத்திய பெர்னான்டோ டே லா ருவா, மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.

2016-ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர் சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கட்ட பெர்னான்டோ டே லா ருவா(81) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of