மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளாரா?

399
jayalalitha

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளாரா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 1997-98 ம் ஆண்டு தனக்கு 4.67 கோடி ரூபாய் அளவுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக கணக்கு தாக்கல் செய்தார்.

அதன் அடிப்படையில் 7 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் சொத்து வரியாக தீர்மானித்து வருமான வரித் துறை உத்தரவிட்டது. ஆனால், ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை, ஜெயலலிதாவுக்கு, 3.83 கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருப்பதாகவும், சொத்து கணக்கை ஜெயலலிதா முறையாக அறிவிக்கவில்லை என வருமான வரித்துறைக்கு அறிக்கை அளித்தது.

அதன் அடிப்படையில், வழக்கை மீண்டும் மதிப்பீடு செய்து வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயம், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை மாற்றியமைத்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

இதனை எதிர்த்து வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் மற்றும் அவர் உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 26 ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here