தோனியின் கருத்தை ஏற்க முடியாது.. – ஸ்ரீகாந்த்

2556

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்த பின் பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, இளம்வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை என்பதால்தான் அவர்களை களமிறக்கவில்லை என்றும் ஆனால் வரும் ஆட்டங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த கருத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இளம்வீரர்களிடம் உத்வேகம் இல்லை என தோனி எப்படி கூற முடியும் என்றும் ஜெகதீஷிடம் இல்லாத உத்வேகத்தை கேதார் ஜாதவிடமும், பியூஷ் சாவ்லாவிடமும் தோனி பார்த்துவிட்டாரா என கேள்வி எழுப்பினார்.

தோனி சிறப்பு வீரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றும் அதற்காக அவர் கூறும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்..

Advertisement