அரசு வேலை வாங்கி தருவதாக 19 லட்சம் மோசடி செய்த முன்னாள் ஊர்க்காவல் படை காவலர் கைது

487

திருவள்ளுவர் மாவட்டம் லெட்சுமணன் நகரை சேர்ந்தவர் கார்த்திக்கேயன்.

ஊர்க்காவல் படையில் காவலராக பணியாற்றிய இவர், தற்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிள்ளைபாளையம் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கேயனை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று தனிப்படை போலீசார் கார்த்திக்கேயனை கைது செய்தனர். விசாரணையில் அவர் 11 பேரிடம் 19 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கார்த்திக்கேயனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of