சோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..!

2478

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோதவாடியை பூர்வீகமாக கொண்டவர் மயில்சாமி அண்ணாதுரை. முன்னாள் இஸ்ரோ இயக்குநரான அண்ணாதுரையின் தந்தை மயில்சாமி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இதனிடையே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மயில்சாமி, கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இஸ்ரோ முன்னாள் இயக்குநரின் தந்தை மயில்சாமி இன்று காலமானார். அவரது இரண்டு கண்களும் மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது.

இதையடுத்து பீளமேடு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மயில்சாமி உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் உறவினர்கள், நண்பர்கள், மறைந்த மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தனது முகவரியின் முதல் பாதி இன்று இல்லை என்றும் ஆனாலும் கண் தானம் மூலம் உலகை பார்க்க போகிறார் எனவும் மயில்சாமி அண்ணாதுரை உருக்கத்துடன் தெரிவித்தார்.

Advertisement