முன்னாள் மேயர் கொலையில் திடீர் திருப்பம்..,! திமுக பிரமுகர்…,!

746

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்து மூன்று நாட்களாகயும், கொலை தொடர்பாக 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும், இதுவரை துப்பு துலங்காமல் உள்ளது. அரசியல் கொலையா, சொத்து பிரச்சனையா, முன்விரோதமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக கூறி உமா மகேஸ்வரி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் மாவட்ட தி.மு.க மகளிரணி துணை செயலாளர் சீனியம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of