குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் 2 வது நாளாக சி.பி.ஐ. சோதனை

523

உயர் நீதிமன்ற உத்தரவின்படி குட்கா ஊழல் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், நேற்று அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, தமிழக டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா, மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரது வீடுகளில் சுமார் 10 மணிநேரம் நடைபெற்ற சோதனை மாலையில் நிறைவடைந்தது. தூத்துக்குடி சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் சம்பத் வீட்டில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் 2வது நாளாக இன்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நொளம்பூரில் உள்ள ஜார்ஜ் வீட்டில் காலை முதல் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of