முன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி

482

முன்னாள் குடியரசுத்தலைவர்  பிரணாப் முகர்ஜிக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவருடன் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று பிரணாப்முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், அவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக கூறியுள்ளார். இதனால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் மருத்துவபரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்றும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

84 வயதான பிரணாப்முகர்ஜி, வழக்கமான உடல்பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. உள்துறை அமைச்சர் அமீத்ஷா உள்ளிட்ட மூன்று மத்திய அமைச்சர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.