முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் என்.டி.திவாரி உடல்நலக்குறைவால் காலமானார்

216
n d tiwari

உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. அவர் தனது பிறந்த தினமான அக்டோபர் 18ஆம் தேதியிலேயே மரணமைடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திவாரி, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர்.

இந்தியாவிலேயே இரு மாநிலங்களின் முதல்வராக இருந்த ஒரே தலைவர் திவாரி மட்டுமே. உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாமல் உத்தரகாண்ட் மாநில முதல்வராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

1925ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி பிறந்தவர் என்.டி.திவாரி. உ.பி. முதல்வராக 1976 முதல் 1977 வரையிலும், 1984 முதல் 1985 வரையிலும் பின்னர் 1988 முதல் 1989 வரையிலும் இருந்துள்ளார். 2002 முதல் 2007 வரை உத்தர்காண்ட் முதல்வராக இருந்தவர் திவாரி. தீவிர அரசியலை விட்டு விலகிய பின்னர் அவர் 2007ம் ஆண்டு ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு இருந்தார் பின்னர் 2009ல் பதவியை விட்டு நீக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here