சென்னை கிண்டியில், பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தையின் சடலம் குப்பைத்தொட்டியில் கண்டெடுப்பு

908

சென்னை கிண்டியில், பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தையின் சடலம் குப்பைத்தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கிண்டி கன்னிகாபுரம் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டி ஒன்றில் இருந்து, அதிகாலை 2 மணியளவில் குப்பையை அப்புறப்படுத்தும் பணியில் துப்புரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, குப்பைத்தொட்டியில் தொப்புள்கொடியுடன் பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த துப்புரவு பணியாளர்கள், இதுகுறித்து, காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கிண்டி போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றினர்.

பின்னர், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் எடுக்கப்பட்டு, குழந்தையின் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெண் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குப்பைத்தொட்டியில் இருந்து, பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement