கணவனை தாக்கிவிட்டு, மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது

953

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கணவனை தாக்கிவிட்டு, மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் 2 சிறுவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கோபால் ரெட்டி என்பவர் தனது மனைவியுடன் கண்டிகை கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, கோங்கல் மேடு பகுதியில் அவர்களை வழிமறித்த மர்மநபர்கள் 4பேர், கோபால் ரெட்டியை கடுமையாக தாக்கிவிட்டு, அவரது மனைவியை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதனிடையே, படுகாயமடைந்த கோபால் ரெட்டி, ஊருக்குள் சென்று கிராம மக்களை திரட்டி சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அதற்குள்ளாக, அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் 4 பேரும் கோங்கல்மேடு கிராமத்தை சேர்ந்த மோகன், முனியசாமி, லட்சுமணன் மற்றும் சிவா என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களில் லட்சுமணன் மற்றும் சிவா இருவரும் சிறுவர்கள் என்பதால், அவர்களை செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும், மற்ற இருவர்களை புழல் மத்திய சிறையிலும் அடைத்தனர்.