ஆட்டோக்களுக்கு இலவச கேஸ்! வெற்றியை கொண்டாடிய பாஜக தொண்டர்

504

இந்தியாவின் 17-வது நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது.

உறுதியான முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை இருந்தாலும் மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்குப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.

பா.ஜ.க வெற்றி

பா.ஜ.க வெற்றி

நாடு முழுவதும் பா.ஜ.க தொண்டர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகங்களிலும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் மோடியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் அனைத்து ஆட்டோக்களுக்கும் இலவசமாக கேஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதனால் அந்த பெட்ரோல் பங்க் உள்ள பகுதியில் ஆட்டோக்கள் அலைமோதி வருகின்றன. 

பிற்பகலில் இந்த அறிவிப்பு வெளியானது முதல் தற்போது வரை சுமார் 100 ஆட்டுக்காரர்களுக்கு கேஸ் நிரப்பப்பட்டுள்ளது. இன்னும் 200 ஆட்டோக்கள் அந்த பெட்ரோல் பங்க் முன் வரிசைக்கட்டி நிற்கிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of