காதலித்த பெண்னை கேலி செய்ததால் நண்பன் எரித்து கொலை

721

ராஜபாளையம் அருகே நண்பன் காதலித்த பெண்னை கேலி செய்ததாக நண்பனையே எரித்து கொலை செய்து புதைத்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னால் காணமல் போன நிலையில் மீனாட்சிபுரம் கழிவு நீர் ஒடையில் இரண்டு சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இது தொடர்பாக மாரியப்பனின் நண்பர்கள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் நண்பன் காதலித்த பெண்னை கேலி செய்தாகவும் அதனால் ஆத்திரத்தில் கொலை செய்து உடலை குழிதோண்டி புதைத்தாக கைதான ராஜா என்பவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

கொலை செய்து முதலில் ராஜாவின் தோட்டத்தில் புதைத்ததாகவும், அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து தோண்டி உடலை எரித்து பாதி எரிந்த உடலை சாக்கு மூட்டையில் கட்டி கழிவு நீர் ஒடையில் போட்டது விசாரணையில் தெரிய வந்தது.

ராஜா அளித்த கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தங்க செல்வம், ஜெயகுமார், செல்வகுமார், நேச குமரன் ஆகியோரை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட மாரியப்பனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.

அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ பிடிக்காமல் பிரிந்து சென்று விட்டனர். மேலும் மாரியப்பன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.