தண்ணீர் பஞ்சம்! திருமண ஜோடிக்கு வழங்கிய வித்தியாசமான பரிசு!

612

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை உணர்த்தும் வகையில், திருவாரூரில் திருமண ஜோடிகளுக்கு நண்பர்கள் தண்ணீர் கேனை பரிசாக வழங்கினர்.

தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பற்றாக்குறையால், பொதுமக்கள் பல கிலோமீட்டர் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தண்ணீர் பஞ்சத்தை உணர்த்தும் வகையில், திருவாரூரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தி மணமக்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 25 லிட்டர் தண்ணீர் கேனை பரிசாக வழங்கினர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of