நண்பர்கள் தினம்.. புரட்சி தலைவர் முதல் மக்கள் செல்வன் வரை…

1044

புரட்சி தலைவர் தொடங்கி மக்கள் செல்வன் வரை நட்பை பற்றி பேசாத பிரபலம் இங்கு இல்லை. நண்பனால் வீழ்ந்தவனை விட இங்கு நண்பனால் வாழ்ந்தவர்கள் பல. வாருங்கள் நட்பின் பெருமையையும் நாம் ரசித்த பிரபலங்களின் நடப்பையும் பற்றி பார்க்கலாம்.

கொண்ட கொள்ளைகள் வேறு, பின்தொடர்ந்து தலைமை வேறு என்றபோதும் கலை என்னும் கயிற்றால் கட்டுண்ட இரு உயிர்கள் தான் நடிகர் திலகமும், முத்தமிழ் அறிஞரும். கலைஞர் எழுதிய ஆயிரம் ஆயிரம் வசனங்கள் பேசி நடித்தவர் நடிப்பு கடவுள் சிவாஜி.

ஒரு முறை கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற சிவாஜி, நண்பா நான் வயதானவன், இன்னும் எத்தனை நாள் வாழ்வேன் என்று தெரியாது ஆனால் என் வயதில் இரண்டு வருடங்களை உனக்கு தருகிறேன் என்று கூறி கண்கலங்கினார்.

2001ம் ஆண்டு சிவாஜி அவர்கள் மறைந்தபோது என் நண்பனுக்கு சிலை எழுப்ப நினைத்தேன் ஆனால் அது தடை பட்டது. இன்று அது வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது. ஒருவேலை இது நடக்காமல் போயிருந்தால் எனக்கு நீங்கள் சிலை வைக்க இடம் தேடி இருப்பீர்கள் என்று கூறி கண்கலங்கினார். இந்த மாமேதைகள் இருவருமே தங்கள் இறப்புவரை நல்ல நண்பர்களாக வாழ்ந்தனர்.

சட்டைக்கு போட கஞ்சி வேண்டும் என்று குறி, வடித்த கஞ்சியை கடன்பெற்று அதில் உப்பிட்டு அதை பங்கிட்டு குடித்து விட்டு வாய்ப்பு தேடி அலைந்த இரு நல்ல நண்பர்கள் தான் சிரிப்புலகின் முடிசூடா மன்னனாகிய கருப்பையன் என்னும் கவுண்டமணி மற்றும் மாபெரும் இயக்குனரான திரு. ஆர்.சுந்தர்ராஜன். ஒரு முறை சுந்தர்ராஜன், கவுண்டமணியிடம் நண்பா பசிக்குது என்றவுடன் செய்வதறியாது ரத்ததான மையத்திற்கு சென்று ரத்தம் விற்று நண்பனின் பசி போக்கினார்.

gowndamani-director-sundararajan

கமல் 50, தமிழ் கலைஞர்களால் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு. கமல் எனது திரையுல அண்ணா என்று ஆரம்பித்தார் ஒருவர். ஒரு சவால் விடுகிறேன், இதுவரை நடிப்புலகில் என்னை போல ரஜினியை போல ஒரு நெருக்கமான நல்ல நண்பர்கள் யாரும் கிடையாது என்று முடித்தார் மற்றொருவர்.

காதல் மன்னனும், ஸ்டைல் மன்னனும் இன்றும் இணை பிரியா நண்பர்கள். பல தலைமுறை நடிகர்கள் இங்கு வந்தாலும் இன்னும் இந்த இரண்டு ஜாம்பவான்கள் இளம் தலைமுறைக்கு ஒரு சிம்மசொப்பனமே என்றால் அது மிகையல்ல.

பல முறை நண்பர்களுக்காக பல தியாகம் செய்த ஆர்யா, உயர்ந்த இடத்தை அடைந்ததும் தன் வளர்ச்சிக்காக பாடுபட்ட நண்பர்களை மறவாத சிவகார்த்திகேயன், என்று இந்த திரையுலம் பல நல்ல நண்பர்களால் நிறைந்துள்ளது.

தாய், தந்தை போல நட்பும் ஒரு உறவென்பதை உணர்ந்து இந்த நண்பர்கள் தினத்தை ஆர்ப்பரித்து கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.