மனிதனின் தொற்றை நீக்கும் தவளை தோல் ?

219
frig-3.3.19

பாம்பின் விஷம் கூட மருந்தாக பயன்படும் என்பது நாம் அறிந்ததே. உலகில் உள்ள பல ஜீவராசிகள் மனிதனுக்கு ஏற்படும் பல நோய்களையும், தொற்றுகளையும் போக்கும் மருந்தாக பயன்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது தவளையின் தோலும் மனிதனுக்கு மருந்தாக பயன்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உயிரியல் அறிஞர் “ராபர்டோ” என்பர் பல ஆண்டுகளாக உயிரியல் சார்ந்த ஆய்வுகளை நடத்திவருபர். அழிந்து வருகின்ற தவளை இனங்களை இனம் கண்டு அவற்றை காக்கும் வண்ணம் அவர் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அரியவகை தவளைகளை கொண்டு மனிதனுக்கு ஏற்படும் தொற்றுக்களை குணப்படுத்தலாம் என்பதையும் அவர் கண்டறிந்துள்ளார். “அஸ்பெர்ஜில்லஸ் பியூமிக்ட்ஸ்” என்ற மனிதனின் ஒரு வகை ஒவ்வாமைக்கு தவளைகளின் தோலில் வாழும் “பிஸேடோமொனாஸ் சிக்கோரி” என்ற பாக்டீரியாக்கள் பயன்படும் என்று கண்டறிந்துள்ளார்.