நவம்பர் ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் – போக்குவரத்து சங்கம்

248
transport

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர்நீதிமன்றம் தலையிட்ட பின்னர், வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. அப்போது, அரசின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் அரசு நிறைவேற்றியது.

இந்நிலையில், ஊதிய உயர்வு, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 7 ஆயிரம் கோடியை திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

வேலை நிறுத்தத்துக்கான நோட்டீஸ் விரைவில் போக்குவரத்து மேலாண் இயக்குநர் மற்றும் தொழிலாளர் துறை ஆணையரிடம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here