அதிக கொழுப்பு இருக்கா? இதோ உங்களுக்காக உணவு பாதுகாப்பு ஆணையம் செய்த ஏற்பாடு!

625

இன்றை காலகட்டத்தில் அணைவருக்கும் சர்க்கரை நோய், உடலில் அதிகப்படியான கொழுப்பு, உப்பு நோய் ஆகியவை சாதரனமாக தோன்றுகிறது. பணக்கார நோய் என்று கருதப்பட்ட இவை, இன்றைய நாட்களில் அணைவருக்கும் எளிதில் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நோய்கள் வருவதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது, சர்க்கரை, கொழுப்பு, உப்பு உள்ள உணவுப்பொருட்களை அதிகப்படியாக பயன்படுத்துவது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பேக்கேஜ் செய்யப்பட்ட சிப்ஸ், சூப், பிஸ்கட், ஜூஸ் போன்றவற்றின் பாக்கெட்டின் மீது கொழுப்பு, உப்பு, சர்க்கரை அளவு அதிகமிருப்பதைக் குறிக்கும் படி சிவப்பு நிற லேபிள் பதிக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் புதிய வரைவை வகுத்துள்ளது.

இதற்கு அனைத்திந்திய உணவு பதப்படுத்துவோர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர் விரும்பும் சுவைக்கேற்பவே உணவுப் பொருட்களில் கோரப்பட்டதை விட அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை சேர்க்கப்படுவதாகவும், இது உற்பத்தியாளரின் விருப்பம் அல்ல என்றும் கூறியுள்ளது.

வரும் வாரத்தில் லேபிலிங் தொடர்பான வரைவு மீது மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரின் கருத்தைக் கேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of