தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் – முழு விவரம் இதோ

412

தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை  ஆயிரத்து 456 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சமாக சென்னையில் 276, சேலம் மாவட்டத்தில் 138, மதுரை மாவட்டத்தில் 108 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் 97, திருப்பத்தூர் மாவட்டத்தில் 85, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 64 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்சமாக, அரியலூர் மாவட்டத்தில் 3 பகுதிகளும், கரூர் மாவட்டத்தில் ஒரு பகுதியும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது. இதில், நாமக்கல், தருமபுரி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of