டிசம்பர் 2-ந் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு இல்லை

6951

இங்கிலாந்தில் டிசம்பர் 2-ந் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் பெருந்தொற்று பாதிப்பு 2 வது அலையாக வேகமாக அதிகரித்தது. இதனால், அங்கு கடந்த 2 ம் தேதி முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டிசம்பர் 2-ந் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மாகாண அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement