ஒரு வாரத்திற்கு முழு பொதுமுடக்கம் – தமிழகத்தில் எந்த பகுதியில்..?

546

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூஜூவாடி பகுதி முழுவதும் ஒரு வாரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஓசூர் அடுத்த ஜூஜுவாடி பகுதியில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

மேலும் இதுவரை 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில் ஜூஜூவாடி பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, தளர்வுகள் இன்றி ஒரு வாரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன் பிறப்பித்தார்.