செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு – நாராயணசாமி

279

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாளை முதல் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்டை கூட்டம் நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதுச்சேரியில் மேலும் ஆறு வார காலத்திற்கு, நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாக கூறினார்.

எனவே புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாளை முதல் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement