அதிமுக-பாமக கூட்டணி : வெற்றியா? தோல்வியா? முழுவிபரங்கள்

1341

இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் வெற்றியை தன் வசமாக்க பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், பாமக-வினர் நாடாளுமன்ற தேர்தலை அதிமுக-விடம் கூட்டணி வைத்து எதிர்கொள்ள உள்ளது. இதற்காக பாமக-விற்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

admk-pmk-1பாமக-வினர் இதுவரை எந்த எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்துள்ளது? மற்றும் எத்தனை வெற்றியை தன்வசமாகியுள்ளது? முழு விபரங்கள்.

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக மற்றும் பாஜக-வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதில் 5 இடங்களில் போட்டியிட்ட பாமக 4 இடங்களில் வெற்றிபெற்றது.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக – திமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட 7 தொகுதிகளில் பாமக 5-ல் வெற்றி பெற்றது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 5 இடங்களிலும் பாமக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் பாமக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலமே அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற 15 வது மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட 6 இடங்களிலும் தோல்வியை தழுவியது.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த பாமக, அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட ஒரு இடத்தில் மட்டும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி வெற்றியில் முடியுமா? இல்லை தோல்வியில் முடியுமா? என்பது மக்கள் கையில் தான் உள்ளது.

ஆனால், 15 வது மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாமக படு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement