
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், விவசாய தொழிலாளர்கள், மண்பாண்டம், உப்பளம், கைத்தறி, கட்டுமானம் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூடிய போது, எப்போது இந்த நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த மாத இறுதிக்குள் ஏழை தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.