ப.சிதம்பரம் வீட்டிற்கு 4 வது முறையாக சிபிஐ வந்ததால் பரபரப்பு

173

இரண்டு மணி நேரம் அளித்த கெடு முடிவடைந்தும் சிபிஐ அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜராகாததால்,

டெல்லியில் முன்னாள் நிதியமமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு 4 வது முறையாக சிபிஐ அதிகாரிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

INX மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில்,  நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரம் இல்லத்திற்கு சென்றனர். அப்போது ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால், அவரது குடும்பத்தாரிடம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் கொடுத்துவிட்டு சென்றனர்.

அதனை தொடர்ந்து நள்ளிரவில் சென்ற சிபிஐ அதிகாரிகள் 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று வீட்டில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர். மேலும் ப.சிதமபரத்தின் இ-மெயிலுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் ப.சிதம்பரம் இன்னும் ஆஜராகவில்லை.

இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தின் இல்லத்துக்கு 4வது முறையாக வந்தனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of