கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு மேற்கொள்ள உள்ள மத்திய குழுவின் 3 நாட்கள் பயண விவரம் வெளியீடு

909

கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு மேற்கொள்ள உள்ள மத்திய குழுவின் 3 நாட்கள் பயண விவரம் வெளியாகியுள்ளது.

கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையில் 6 பேர் கொண்ட குழு இன்று முதல் 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்ட மத்திய குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்கின்றனர். அங்கிருந்து கார் மூலம் சென்று பார்வையிட உள்ளனர்.

மாலை 4.30 மணிக்கு புதுக்கோட்டையில் முதல்கட்ட ஆய்வை தொடங்கும் மத்திய குழுவினர், அருந்ததியர் காலனி, சோழகன்பட்டி, கந்தவவகோட்டை, புதுநகர், முதுகுளம், உறியான்பட்டி, நெப்புகை, வீராடிபட்டி உள்ளிட்ட 8 இடங்களில் ஆய்வு செய்கின்றனர். பின்னர் இரவு 8.30 மணிக்கு தஞ்சையில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

அதனை தொடர்ந்து நாளை காலை 7 மணி முதல் ஒரு மணி வரை மீண்டும் தஞ்சையில் ஆய்வு மேற்கொள்கின்றனர். நாளை மாலை 3.30 மணிக்கு திருவாரூரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

திங்கட்கிழமை காலை 7 மணி முதல் நாகை வேதாரண்யத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மத்திய குழுவினர், தொடர்ந்து மாலை 2.30 மணிக்கு காரைக்கால், புதுச்சேரி பகுதியில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

3 நாட்கள் ஆய்வு செய்யும் மத்திய குழுவினர் வரும் 27 ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியும் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளனர். 27 ஆம் தேதிக்கு பின் மத்திய அரசிடம் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

central-officers

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of