கஜா புயல் நாளை மறுநாள் பாம்பன் – கடலூர் இடையே கரையை கடக்கும்

437
gaja-puyal

கஜா புயல் நாளை மறுநாள் பிற்பகல் பாம்பன் – கடலூர் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல், இன்று மதிய நிலவரப்படி சென்னையில் இருந்து 740 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 830 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக வேகமாக நகர்ந்து வந்த கஜா புயல் இன்று காலை முதல் குறைந்த வேகத்தில் நகர்ந்து வருகிறது. இருப்பினும் இந்த புயல் அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து, வரும் 15ஆம் தேதி பிற்பகலில் பாம்பன் – கடலூர் இடையே கரையை கடக்கும் என இந்தி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் கடல் அலைகள் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கஜா புயல் அவ்வப்போது திசை மாறி வருவதால் கரையை கடப்பதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.