மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்க சிறப்பு சட்டப்பேரவை கூட்ட வேண்டும்

246
MK-stalin

மேகதாது அணை தொடர்பான தீர்மானம், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்காமல், வேண்டுகோள் விடுக்கும் விதமாக இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை தொடர்பான தீர்மானம் நீர்வளத்துறையை மட்டுமே கண்டிப்பதாகவும், மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் இல்லை என்று தெரிவித்தார்.

இருப்பினும் டெல்டா மக்கள் நலனுக்காக தீர்மானத்தை ஆதரித்ததாக கூறினார்.

கஜா புயல் தொடர்பாக ஆலோசிக்க கூட்டத் தொடரை ஒருநாள் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் பேரவைத் தலைவரும், தமிழக அரசும் ஏற்றுக் கொள்ளவில்லை என கண்டனம் தெரிவித்தார்.