கஜா புயலால் பாதிப்பு – டெல்டா மாவட்டங்களில் மத்திய வேளாண் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு

770

கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளானது.

புயல் பாதிப்பு குறித்து கடந்த மாதம் 24-ம் தேதி முதல் மூன்று நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் மத்திய வேளாண் தொழில் நுட்ப குழுவினர் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

புயலால் சேதமடைந்த தென்னை, வாழை, நெல் ஆகிய பயிர்களை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள், பாதிப்பிலிருந்து விவசாயிகள் மீண்டு வருவதற்கான ஆலோசனையும் வழங்கி வருகின்றனர்.

Advertisement