நீட் தேர்வு – கால அவகாசம் இன்றுடன் முடிவு

55
NEET

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, 2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் www . ntaneet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

பின்னர், வயது உச்சவரம்பு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் கஜா புயல் காரணமாக, நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று நிறைவடைகிறது.

தேர்வு கட்டணத்தை ஆன்-லைனில் செலுத்த நாளை கடைசி நாளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here