புயல் பாதிப்பை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை அரிவாளால் தாக்க முயற்சி

548

வேதாரண்யம் அருகே புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட முதற்கட்டமாக சென்ற போது, அமைச்சர் ஓ.எஸ்.மணியனை அரிவாளால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த மாதம் 18-ஆம் தேதி கைத்தரித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட சென்றனர். அப்போது அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் பொதுமக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் அரிவாளால் தாக்க முயன்றுள்ளார்.

இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement